கோவை ஏப்26 கோவை குனியமுத்தூர் பகுதியில் சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு மாரியம்மன் கோவில் அருகே ஒரு மளிகை கடையில் குனியமுத்தூர் போலீசார் நேற்று திடீர்சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கிலோ புகையிலை பொருட்கள் (குட் கா)இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் அந்த கடையில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் ( வயது 60 )தனது மகன் பார்த்திபனுடன் (வயது 31 )சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் தந்தை -மகனைகைது செய்தனர். அவர்களது வீட்டிலிருந்து ரூ 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மளிகை கடையில் குட்கா விற்பனை :தந்தை -மகன் கைது.
