ஆனைகட்டி மாதேஸ்வரன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்.

கோவை ஏப் 26 நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன், திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 20 23 -ஆம் ஆண்டு ஜெயிலர் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயிலர் – 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது .இந்த படத்தையும் நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ் குமார்,ஆகியோரும் நடிக்க உள்ளனர். ஜெயிலர் – 2 படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு கோவை கேரளாஎல்லையில் உள்ள அட்டப்பாடி பகுதியில் நடைபெற்று வந்தது. . இந்த படத்தில் நடிப்பதற்காக கடத்த பத்தாம் தேதி நடிகர் ரஜினிகாந்த்கடந்த 10- ந் தேதி விமானம் மூலம் கோவை வந்தார். தொடர்ந்து அவர் ஆணைகட்டி பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து வந்தார். அவர் படப்பிடிப்புக்கு செல்லும்போது வரும் போது ஏராளமான ரசிகர்கள் திரண்டு வரவேற்கிறார்கள். அந்த வகையில் கடந்து சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பார்த்ததும் ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி எடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் கோவை ஆனைகட்டி ரோடு மாங்கரை பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் வந்தார்.. இதை அறிந்து ரசிகர்கள் திரண்டனர் இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு நடிகர் ரஜினிகாந்த் ஆனைகட்டி சாலை ஓரம் உள்ள மாதேஸ்வரன் கோவில் அருகே வந்ததும் காரில் இருந்து கீழே இறங்கினார் பின்னர் அவர் மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் .அப்போது அவர் வேட்டி –சட்டை அணிந்து இருந்தார். அவருக்கு கோவில் குருக்கள் பிரசாதம் வழங்கினார் .சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி காரில் புறப்பட்டு சென்றார்.பின்னர்காரில் கோவைக்கு வந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.விமான நிலையத்தில் ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நடிகர் ரஜினிகாந்தை பாதுகாப்புடன் விமான நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர்.பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்.