தீக்குளித்து பெண் தற்கொலை.

கோவை ஏப26 கோவை குனியமுத்தூர், மேற்கு மைல்கல், இட்டேரி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி குமாரி ( வயது 47)இவரது கர்ப்பப்பை அகற்றுமாறு டாக்டர்கள் கூறியிருந்தனர் இதனால் மனம் உடைந்த குமாரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில்மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் அவரது உடல் முழுவதும் கருகியது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மகன் கணேஷ் குமார்குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.