டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக மது விற்ற 2பேர் கைது.

210பாட்டில் பறிமுதல் . கோவை ஏப் 26 கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் நேற்று விளாங் குறிச்சி ரோட்டில்உள்ள டாஸ்மாக் கடையில் (எண் 1716) திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக ஆர். எஸ். புரம், சீனிவாச புரத்தைச் சேர்ந்த அண்ணாமலை ( வயது 47) ராமநாதபுரம் மாவட்டம், பாப்பா குடியைச் சேர்ந்த நீதிராஜா (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .210 மது பாட்டில் ரூ 650 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.