சமீபகாலமாக அதிமுக நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்த செங்கோட்டையன் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அவருக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றார். அண்மைகாலமாக கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்த நிலையில் இன்று கலந்துகொண்டார். செங்கோட்டையனுக்கு முதல் வரிசையில் இடம் வழங்கப்பட்டது. அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் முதல் முறையாக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்து வந்த செங்கோட்டையன் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.