கோவை ஏப் 28 திருவண்ணாமலை மாவட்டம் , குப்பநத்தம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 26) தேனி மாவட்டம்,பழனி செட்டிப்பட்டி,ராஜாஜி நகரை சேர்ந்தவர் மரியசாமி (வயது 36) இவர்கள் இருவரும் அன்னூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர் .நேற்று இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கோவை -அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஞானசேகர் ஓட்டினார். பெரியசாமி பின்னால் இருந்தார். குறுக்கம் பாளையம் பிரிவு அருகே சென்றபோது முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர்வேனும், பைக்கும் மோதிக்கொண்டன. இதில் இருவரும் படுகாயம் அடைந்து அதே இடத்தில்பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்செல்வன்சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார்.இது தொடர்பாக ஈச்சர் வேன் டிரைவர் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்னூரில் பைக் – வேன் மோதல். 2 தொழிலாளி உயிரிழப்பு.
