பொன்முடியின் பதவி விலகல், தமிழ்நாடு முழுவதும் அதிமுக மக்கள் சக்தியை திரட்டி நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, என அதிமுக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க சிறுமையான பார்வை கொண்ட பொன்முடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுக மக்கள் சக்தியைத் திரட்டி நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். ஆனால், இங்கு ஆளும் முதலமைச்சர் அத்தனை ஊழல்களுக்கும் துணை நின்று “தியாகி” பட்டம் சூட்டிய நிலையில், நீதிமன்றம் வாயிலாக செந்தில் பாலாஜி பதவி விலகல் என்ற நீதி கிடைத்திருக்கிறது!
அரசியலை மக்கள் சேவையாக நினைக்காமல், ஊழல் செய்து கொள்ளை அடிக்கும் பிழைப்பாகவே கருதும் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர் விடத் துவங்கிவிட்டன. 2026-ல் அதிமுக -ன் நல்லாட்சி அமைவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.