ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பம் நாட்டல் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், இந்த தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசிவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்பப்டுகிறது. இந்த சந்திப்பில் ஜெனரல் சவுகான் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு விரிவாக விளக்கியுள்ளார். மேலும் அதற்கான உத்திகள் மற்றும் அவற்றின் நிலைத்தன்மை குறித்து விவாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2019-இல் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். ஏப்ரல் 22 நடந்தை இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 23 முதல் பஹல்காமில் சம்பவம் நடந்த இடத்தில் ஆதாரங்களைத் தேடும் பணியை தேசிய புலனாய்வு முகமை (NIA) குழுக்கள் தீவிரப்படுத்தியுள்ளன.
குறித்த விசாரணையில் NIA ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.