கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் நாய்களுக்கான வெறி நோய் (ரேபிஸ் ) தடுப்பூசி முகாம் சூலூர் கால்நடை மருத்துவமனையில்
நடைபெற்றது. சூலூர் பகுதியில் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கின்ற நாய்களை நாய் பிடிப்பவர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியருடன் இணைந்து வானங்கள் மூலம் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் நாய்களுக்கு தோள்களில் ஏதேனும் புண்கள், தோல் நோய் இருந்தால் அவற்றிற்கும் மருந்து செலுத்தப்பட்டது. சூலூர் பேரூராட்சி செயலாளர்கள் சரவணன், துணைத்தலைவர் கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற இம் முகாமில் சூலூர் கால்நடை மருத்துவமனை தலைமை மருத்துவர் சக்திவேல் நாராயணன், உதவி மருத்துவர் சரண்யா, முன்னாள் கால்நடை மருத்துவர் சுல்பிக்அலி மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பேரூராட்சி மூலம் பிடித்து வரப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட தெரு நாய்களுக்கும் பேரூராட்சி மூலம் அறிவிப்பு கொடுத்து வீடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
வீட்டு நாய் மற்றும் தெரு நாய்களுக்கான வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி சிறப்பு முகம்.
