கோவை ஏப் 29 கோவைமதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரைபிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில்அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பக்கம் உள்ள பட்டிவீரன்பட்டி, அம்பேத்கார் நகரைச் சேர்ந்த கணேஷ் (வயது 23) திருப்பூர் மாவட்டம் பல்லடம் ,மங்களம் ரோடு, காமராஜ் நகர் நவ்புல் ( வயது 20 )சிவகங்கை மாவட்டம் வேலூர் எருக்காலை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது20) என்பது தெரியவந்தது . 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரயில் நிலையம் பகுதியில் 2 கிலோகஞ்சாவுடன் 3 பேர் கைது.
