டாஸ்மாக் பாரில் அதிகாலையில் மது விற்றஊழியர் கைது.

155 பாட்டில் பறிமுதல் . கோவை ஏப்29 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ( எண் 18 40)உள்ளபாரில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அதிகாலையில் சட்ட விரோதமாககள்ள சந்தையில் மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது சின்னியம்பாளையத்தில் வசித்து வரும் பார் ஊழியரான புதுக்கோட்டை மாவட்டம், மணல் மேல்குடியை சேர்ந்த காளிதாஸ் ( வயது 49) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 155மது பாட்டில்களும் 45 ஹான்ஸ்பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டது.பார் உரிமையாளர் பாண்டி தலைமறைவாகி விட்டார்.இவரை தேடி வருகிறார்கள்.