லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த தலைவர் ரிஷி சுனக் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகியதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஈடுப்பட்டுள்ளது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பிகள், ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் அமைச்சர்கள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, 3 சுற்றுகளாக நடந்த வாக்கு பதிவு முடிவில் கன்சர்வேடிவ் கட்சியின் 357 எம்.பிகள் வாக்கு அளித்தன.
இதில் பிரிட்டன் முன்னாள் நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் 4வது சுற்றுக்கு முன்னேறினார். 3ம் சுற்று வாக்கு பதிவில் ரிஷி சுனக் உள்பட 5 பேர் களத்தில் இருந்தனர். இதில் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். அடுத்து இரண்டு சுற்றுக்கள் நடத்தப்பட்டு இறுதி சுற்றுக்கு இருவர் தேர்வு பெறுவர். இருவரில் ஒருவரை கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யவுள்ளனர். இதில் வெற்றி பெரும் நபர் கட்சிதலைவர் பொறுப்பு ஏற்பார். அவரே புதிய பிரதமராகவும் பதவி ஏற்பார். வெற்றி பெரும் நபரின் பெயர் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி அறிவிக்கப்படுகிறது.