மேம்பாலத்தில் 4 – வது விபத்து – தொடரும் விபத்துக்களால் மக்கள் அச்சம்.
கோவை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் நான்காவது விபத்து ஏற்பட்டுள்ளது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கோவை – திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் தொடர்ந்து விபத்துக்கள்நடைபெற்று வருகிறது.ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.
இதன் காரணமாக அந்த பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வேகத்தடைகள் அமைக்கப்பட்ட கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் ஒருவர் பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பாலத்தின் வளைவுகளில் சாலையில் ஒரு பகுதியில் அடைக்கப்பட்டது.
தெரிகிறது. இந்நிலையில், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில்இன்று கோவை அரசு மருத்துவமனையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற இரண்டு கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றன.அந்த கார்கள் மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்றது. அப்போது அங்கிருந்த வேகத்தடைகளை இரண்டு கார் ஓட்டிகளும்கவனிக்கவில்லை என்று
திடீரென பிரேக் பிடித்ததில் இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த மேம்பாலத்தில் விபத்துக்கள் நடைபெற்று வருவது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.