கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம் அண்ணா நகர் பெரிய வீதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி. மயிலாத்தாள் ( வயது 77) கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார் .அவரது மகன் மனநிலை பாதிப்பால் எங்கோ காணாமல் போய்விட்டார். இதனால் மயிலாத்தாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று அவரது வீட்டில் அருகில் பழக்கடை நடத்தி வரும் சிவகுமார் என்பவர் மூதாட்டியின் வீட்டின் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியது.இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வினோத் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.அந்த பெண்ணை யாரோ கட்டிப் போட்டு, செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.