ஈரோடு மாவட்டம் பூந்துறை ரோட்டில் அமைந்துள்ள கே ஏ எஸ் நகர் குடியிருப்பு வீட்டில் மாடியில் காய வைத்த துணி எடுப்பதற்காக வீட்டு உரிமையாளர் கவிதா மேலே செல்லும் போது வீட்டை ஒட்டி உள்ள வேப்ப மரத்தில் பாம்பு ஒன்று இருப்பதாக பார்த்து அலறி அடித்து கீழே இறங்கி ஓ வந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பக்கத்து வீட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அவர்களிடம் பாம்பு பிடிக்கும் யுவராஜ் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு அழைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த யுவராஜ் மரத்தில் மீது உள்ள சுமார் 10 அடி நீளம் உடைய பாம்பை பத்திரமாக மீட்டார் பிடிபட்ட பாம்பு மஞ்சள் சாரை பாம்பு வகையை சார்ந்தது. இதேபோல் ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் ஆறு பாம்புகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 160 க்கும் மேற்பட்ட பாம்புகள் பல்வேறு பகுதிகளில் மீட்கப்பட்டுள்ளன வெயில் காலம் தொடங்கியதால் உஷ்ணம் தாங்காமல் பாம்புகள் வெளியே குடியிருப்பு பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளது என்று யுவராஜ் தெரிவித்தார். பொதுமக்கள் விழிப்புணர்வு இருக்க வேண்டும் சுவற்றை விட்டு எந்த பொருட்களையும் வைக்க கூடாது செப்பல் ஸ்டாண்ட் மீட்டர் பாக்ஸ் படிக்கட்டு போன்றவைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என பாம்பு பிடி யுவராஜ் பொது மக்களுக்கு அறிவுரை கூறினார்..