மேட்டுப்பாளையம்: நல்ல உடல் நலமுடன், படித்தவர்கள் பலர் ஓட்டு போடாமல் வீட்டில் இருந்தனர். ஆனால், தன் 108 வயதிலும், பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று ஓட்டளித்தார்.
காரமடை அருகே தேக்கம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாப்பம்மாள், 108; விவசாயி. பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்த தள்ளாத வயதிலும், தன் ஜனநாயக கடமையை ஆற்ற, தேக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு, ஆட்டோவில் வந்து வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தார். ஜனநாயக கடமையாற்ற அவர் காண்பித்த ஆர்வம், அங்குள்ள அனைவருக்கும் உத்வேகம் அளித்தது.