ஆதரவற்ற சிறுமிகள் காப்பகத்தில் இருந்து 19 வயது இளம்பெண் தப்பி ஓட்டம்.!!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பக்கம் உள்ள குச்சனூரை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் மகாலட்சுமி ( வயது 19) இவர் கடந்த 6 ஆண்டுகளாக கணபதி அத்திபாளையம் பிரிவில் உள்ள ஆதரவற்ற சிறுமிகள் காப்பகத்தில் .இருந்து வருகிறார். இவருக்கு கடந்த 10 – ந் தேதி 18 வயது பூர்த்தியானது. இதை டுத்து அவர் வெளியே செல்ல விரும்புவதாக காப்பக பொறுப்பாளரிடம் தெரிவித்தார். அவர்கள் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாத்ரூம் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பின்வாசல் வழியாக எங்கோ தப்பி சென்று விட்டார்.இதுகுறித்து காப்பகபொறுப்பாளர் விக்டோரியா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..