கோவை சிங்காநல்லூர், ஆரியன் காடு ரோடு பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மனைவி பானுமதி (வயது 65) இவர் நேற்று காலையில் அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரது கழுத்தில் கடந்த 4 பவுன் தங்கசெயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர் .இது குறித்து பானுமதி சிங்கநல்லூர் போலீசில்புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
நடைப்பயிற்சி சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு ..!
