பஸ்சில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் செயின் திருட்டு..!

கோவை : சேலம் மாவட்டம் வாழப்பாடி பக்கம் உள்ள சித்தம் பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வெண்ணிலா (வயது 55 )இவர் நேற்று சேலத்தில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.காந்திபுரத்தில் இறங்கி மேட்டுப்பாளையம் செல்வதற்காக பஸ் நிலையத்தில்நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5பவுன் செயினை காணவில்லை.சேலத்தில் இருந்து கோவைக்கு வரும் பஸ்சில் தூங்கிய போது அருகில் இருந்து பயணம் செய்த பெண் ஒருவர்அவரது கழுத்தில் கிடந்த செயினை நைசாக சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வெண்ணிலா காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.