சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபா பாண்டி. இவரது மகன் லலித் பாண்டி ( வயது 16 ) இவர் நேற்று சேலம் – பாலக்காடு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். மதுக்கரை அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லலித்பாண்டி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக டேங்கர் லாரி டிரைவரான பாலக்காடு பட்டாம்பியை சேர்ந்த அனிபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
வேகமாக வந்த டேங்கர் லாரி பைக் மீது மோதி சிறுவன் பரிதாப பலி..
