நள்ளிரவில் திடீரென எரிந்த சரக்கு ஆட்டோ ..!

கோவை எம்.என்.ஜி வீதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 47) இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார் .இவரது ஆட்டோவை அங்குள்ள மாநகராட்சி பள்ளிக்கூடம் முன் நிறுத்திவிட்டு வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்று விட்டார். இரவில் அந்த ஆட்டோவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது . அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை . இது குறித்து பாண்டி வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..