கோவை கடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சண்முகம். இவர் நேற்று உக்கடம் – புல்லுக்காடு சந்திப்பில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்ப அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த நபர் சப் இன்ஸ்பெக்டர் சண்முகத்தை திட்டி தகராறு செய்தார். இதுகுறித்து சண்முகம் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தெற்கு உச்கடம் அன்பு நகர் 5வது சேர்ந்த அஷ்ரப் (வயது 45) என்பவர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..
வாகன சோதனையில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் தகராறு செய்தவர் மீது வழக்கு..!
