கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்தவர் சையத் இப்ராகிம் ( வயது 40) இவர் தனது முகநூலில் இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் சையத் இப்ராகிம் மீது மத விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.