முகநூலில் வன்முறை தூண்டிய இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குபதிவு..!

கோவை மாநகர இந்து முன்னணி பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் ஜெய்சங்கர். இவர் முகநூலில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலன்புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர் கோவை மாநகர இந்து முன்னணி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.