கோவை : மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கம் உள்ள கப்பலூர், காந்திநகரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அசோக் குமார் ( வயது 29) கார் மெக்கானிக். இவருக்கு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு மத்திய அரசு பணியில் உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக தங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினாராம். இதை நம்பி அசோக்குமார் அவரிடம் ரூ 9 லட்சம் கொடுத்தார்.சிறிது நாள் கழித்து அசோக்குமார் பெயருக்கு ஒரு பணி நியமன ஆணை வந்தது. அதை பார்த்தபோது போலி என்பது தெரிய வந்தது. இது குறித்து அசோக்குமார் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாந்த் உத்தமனை தேடி வருகிறார்கள்.