கோவை தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்தவர் சுவாதி. இவர் தனது வீட்டு அருகே சுற்றித் திரிந்த நாய்களுக்கு தினசரி உணவளித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் அந்த நாயை கல் மற்றும் கட்டையால் தாக்கி சாக்கு முட்டையில் போட்டு காலால் மிதித்து கொன்றார் .இது குறித்து மிருகவதை தடுப்பு பிரிவினர் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர் . போலீசார் செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
தெருநாயை கொலை செய்த நபர் மீது வழக்குபதிவு..!
