கோவை ஆர். எஸ். புரம். சி.எம்.சி. காலணியை சேர்ந்தவர் ரகு குமார். இவரது மகள் ஹேமப்பிரியா (வயது 22) இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் . யாரோ இவருடைய புகைப்படத்தை வைத்து போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதில் இவரது போட்டோவை நண்பர்களுக்கும் குடும்பம் நண்பர்களுக்கும் அனுப்பியதாக தெரிகிறது.இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
இளம் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பியவர் மீது வழக்குப்பதிவு .!
