கோவை மாநகரில் சாலை விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்..போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கோவை மாநகரம் முழுவதும் கடந்த 28ஆம் தேதி: ஸ்டாமிங் ஆபரேஷன் “எனப்படும் தீவிர வாகன சோதனை 42 இடங்களில் நடந்தது. அப்போது மது குடித்துவிட்டு வாகனம்ஓட்டி வந்த 141 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது:- மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. எனவே மது குடிப்பவர்கள் தங்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல டிரைவர்களை வைத்துக் கொள்ள வேண்டும் .இது பற்றிய மதுபான கூடம் ( பார்) உரிமையாளர்கள் மது குடிக்க வருபவர்களிடம் அறிவுறுத்த வேண்டும். மது அருந்த வாகனங்களில் வரநேரிட்டால் பாதுகாப்புக்காக தங்களை அழைத்து செல்ல டிரைவர்களை அழைத்து வரவேண்டும் அல்லது மது குடித்தவர்களை அழைத்துச் செல்ல டிரைவர்களை பார் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..