கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் .நேற்று முன்தினம் கோவை மாநகரில் போக்குவரத்து போலீசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த முதியவர்கள் ,பெண்கள், உட்பட 412 வாகனங்களை போலீசார் தணிக்கை செய்தனர் .இதில் 380 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 முதியோர் ,பெண்கள் ஆகியோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும். எனவே வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.