கோவை சுந்தராபுரம் எஸ்.பி. டவர்சில் திருமண தகவல் மையம் நடத்தி வருபவர் நடராஜன் (வயது 67) இவரிடம் டி .பி .கே .நலம் விரும்பி அவரது மனைவி ஆகியோர் 2018 ஆம் ஆண்டு சென்றனர். தங்களுக்கு முதலமைச்சர் ஒதுக்கீட்டில் அரசு வேலை வாங்கி தரமுடியும் என்று கூறினார்கள் . இதை நம்பி நடராஜன் தனது மகனுக்கும் ,மகளுக்கும் அரசு வேலை வாங்கித் தருமாறு கூறி ரூ 10லட்சம் அவர்களிடம் கொடுத்தார் .வேலை வாங்கி கொடுக்காமல் இருவரும் மோசடி செய்து விட்டனர் .இது குறித்து நடராஜன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் நலம் விரும்பி அவரது மனைவி ஆகியோர் மீது மோசடி உட்பட 2 பிரிவின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.