ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின்படி பல்வேறு இடங்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு டிஎஸ்பி பவித்ராவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மதுவிலக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த ஆனந்தகுமார், கௌரி (கணவன்-மனைவி) இருவரையும் விசாரித்ததில் கஞ்சா விற்பனை செய்வது உறுதியானதையடுத்து இருவரை கைது செய்து அவர்களிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்தார். ஆனந்தகுமார் இதுபோன்று பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருவதினால் அவர் மீது குண்டர் சட்டம் பாயுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.