மகனுடன் மொபட்டில் சென்ற தந்தை லாரி மோதி பலி.. 

மகனுடன் மொபட்டில் சென்ற தந்தை லாரி மோதி பலி..  கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள சாமநாயக்கன்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 68 )இவர் நேற்று தனது மகன் பாஸ்கரனுடன் (வயது 42) மொபட்டில் பெரியநாயக்கன்பாளையம்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வங்கி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாகவந்த ஒரு லாரி இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் தந்தை கோபால் இறந்தார்.மகன் பாஸ்கரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார் . இதுகுறித்துபெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா சம்பவ இடத்துக்குவிரைந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக காரமடை மங்கல கரையை சேர்ந்த லாரி டிரைவர் மாசிலாமணி ( வயது 29) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.