கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட காரமடை வனச் சராக பகுதியான முத்துக்கல்லாறு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வாயில் காயத்துடன் மெலிந்த தேகத்தில் ஒரு யானை சுற்றியது. அந்த யானை விளை நிலங்களுக்குள் புகுந்த அட்டகாசம் செய்தது. இது தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் கடந்த வாரம் அந்த பெண் யானையை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் ஆணையாறு முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரேத பரிசோதனையில் நாட்டு வெடி வெடித்ததில் அதன் தாடை கிழிந்தவுடன் பற்கள் உடைந்தது தெரிய வந்தது .இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்நிலையில் கோவை கோட்ட வனப்பகுதியில் உள்ள மலை அடிவாரம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துடன் சோதனை செய்து வருகின்றார்கள் குறிப்பாக காரமடை வனத்தராக பகுதியில் வனச்சராக அதிகாரி திவ்யா தலைமையில் வனத்துறையினர் தீவிரமாக சோதனை செய்து வருவதுடன் மலையடியார் பகுதியில் உள்ள கிராமங்களில் நாட்டு வெடியை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறும்போது
பொதுவாக காட்டுப்பன்றிகளை வேட்டையாட அவுட்டுக் காயை என்று அழைக்கப்படும் நாட்டு வெடியை பயன்படுத்துவது உண்டு. இதை அடுத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாய் கிழிந்த நிலையில் சுற்றிய அந்த பெண் யானை கேரளாவில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாராவது இதுபோன்ற வெடியை பயன்படுத்துவது தெரிய வந்தால் அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.