வால்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவைமாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின் படி வால்பாறை அருகே உள்ள கவர்கல் எஸ்டேட் பகுதியில் நகர கழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் வார்டு செயலாளர் பெரியசாமி, பிரதிநிதிகள், பழனிசாமி, வார்டு கவுன்சிலர் கனகமனி , எல்.பி.எப்.சங்க பொதுச்செயலாளர் வி.பி.விணோத் குமார் ஆகியோர் முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சுமார் ஆயிரம் பேர்களுக்கு நலதிட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி சிறப்பித்தார்
வெகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஈ.கா. பொன்னுச்சாமி, ஜே.பாஸ்கர், செல்வி விஜய ராஜன், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், என்.இ.பி.சி.புட்ஸ் செயலாளர் ஷெரீப், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், கழக நிர்வாகிகள், நகர கழக சார்பு அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பாக முகவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.