சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் தலைமறைவு..!

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. 7-ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு தாத்தா முறைகொண்ட முதியவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த முதியவர் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரிடம் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். ஆனால் அந்த முதியவர் மீண்டும் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது .இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கோவை மாவட்ட “சைல்டுலைன்’ அமைப்புக்கு தகவல் கொடுத்தார். இதை அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தலைமையிலான குழுவினர் சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர் .அப்போது அந்த சிறுமி அழுது கொண்டே முதியவர் ஒருவர் தன்னை மிரட்டி அடிக்கடிபாலியல் கொடுத்ததாக கூறினார். இதற்கிடையே அந்த முதியவர் தலை மறை வாகி விட்டார் .இது குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து பெண்கள் போலீசார் அந்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..