கோவை: கோவை அருகே உள்ள நீலாம்பூர் மயிலம்பட்டி , ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் .இவரது மகள் அகன்சா ( வயது 23) எம் எஸ் சி பட்டதாரி. நேற்று இவர் நீலம்பூரில் உள்ள ஒரு கடைக்கு சாமான்கள் வாங்க ஸ்கூடடரில் சென்றார். வாங்கி விட்டு திரும்பி வரும் போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணம், ஒரு செல்போன், ஒரு கைக்கடிகாரம் ஆகியவற்றை மிரட்டி கொள்ளடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு செய்து கொள்ளையாகளை தேடி வருகிறார்கள்.
ஸ்கூட்டரில் சென்ற பட்டதாரி பெண்ணை மிரட்டி ரூ 50 ஆயிரம் பணம்,செல்போன் கொள்ளை..!
