உத்தரப்பிரதேசதில் புலிகள் சரணாலய பகுதியில் உள்ள சாலையில் 3 நண்பர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது, அவர்களை யானைக் கூட்டம் துரத்தும் வீடியோ சமூவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் துத்வா புலிகள் சரணாலய பகுதியில் விலங்குகள் அடிக்கடி கூட்டமாக செல்வது வழக்கம். அந்த வழியாக நண்பர்கள் 3 பேர் சென்றுள்ளனர்.
அவர்கள் சாலையோரம் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த யானை கூட்டம் அவர்களை துரத்தியது. காட்டு யானை கூட்டம் துரத்தியதில் உயிர் பயத்தில் 3 பேரும் தலைதெறிக்க ஓடியுள்ளார். தங்களுக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து ஓடும் போது, அதில் ஒருவர் கீழே விழுந்துள்ளார். தனது கை பேசி விழுந்ததைக் கூட பொருட்படுத்தாமல் மீண்டும் அவர் ஓடியுள்ளார்.
இதனை பார்வையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே, வனத்துறை அதிகாரி ஒருவர்”இந்த வழியாக யானைகள் கூட்டம் செல்லும் போது, அவைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.