வால்பாறையில் பகலில் சாலையை கடக்கும் காட்டு யானைகள் கூட்டம்
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள முருகன் எஸ்டேட்டிற்கு செல்லும் பிரிவில் உள்ள வனப் பகுதியிலிருந்து வெளியேறிய எட்டு யானைகள் பகலில் சாலையை கடந்தது இதனைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சிறிது தொலைவிலேயே பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்போனில் படம் பிடித்து யானைகள் தேயிலைத் தோட்டப் பகுதிக்கு சென்ற பின்னர் வாகனங்களை இயக்கியுள்ளனர் அதைத் தொடர்ந்து சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது