திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள, சூரிய நல்லூர் பகுதி வழியாக சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள டீ கடையில் புகுந்த விபத்திக்குள்ளானது. அப்போது டீக்கடையில் டீ அருந்தி கொண்டிருந்த சூரியநல்லூர் ராமநாதபுரத்தை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் முத்துசாமி (60), சூரியநல்லூர் குப்பனகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த நாச்சி என்பவரது மகன் சுப்பன் என்கின்ற தோழன் (75) என்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் நடந்த விபத்தில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் லாரியின் டிரைவர் சிகிச்சை பலனின்றி தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் .
மேலும் இதில் 1.சூரிய நல்லூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த
செல்லமணி (64 ),2.நாந்தவனாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து என்பவரது மகன் மகேந்திரன் (20), 3. குப்பண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கோவிந்தசாமி(67),4. கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரது மகன் மாணிக்கம் (46) என்பது தெரிய வந்தது.மேலும் நான்கு பேரை படுகாயங்களுடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர் .
மேலும் டீ கடைக்குள் புகுந்த சிமெண்ட் ஏற்றி சென்ற லாரியை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் விபத்துக் குறித்து குண்டடம் போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.