வாங்க கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகுது மழை..!

ங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆவணி மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் தற்போதே பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்களில் கனமழை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தான், வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கரையோரம் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.