கோவை மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம் பதி பகுதியில் வசிப்பவர் நாராயணசாமி. இவரது மனைவி காளீஸ்வரி ( வயது 51) நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் இவரது தோட்டத்தில் உள்ள வீட்டினுள் புகுந்தனர். தனியாக இருந்த காளீஸ்வரியின் கழுத்தை கயிற்றால் இறுக்கினார்கள். பின்னர் இவரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் பீரோவில் இருந்த நகை,பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். கயிற்றால் கழுத்தை இறுக்கியதில் படுகாயம் அடைந்த காளீஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..