திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பக்கம் உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது 19 வயது மகள் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பாரா மெடிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார.கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.கடந்த 16ஆம் தேதி தனது அக்காள் திருமணத்திற்காக ஊருக்கு சென்றவர்.ஊருக்கு செல்லவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை முருகானந்தம் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்த மருத்துவ மாணவி எங்கோ மாயம்.!
