கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம் அக்கம்மாள் காலனி சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 52) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.இவர் 31 ஆம் தேதி சொந்த ஊரான நெல்லைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்தவர் துடியலூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மனைவி சுந்தரி துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ‘
புத்தாண்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்த வியாபாரி பலி..
