சூரிய குடும்பம் உருவானபோது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறை பொருள்கள்தான் சிறு கோள்கள் அல்லது விண்கல் என்று அழைக்கப்படுகின்றன.
சூரிய குடும்பத்திற்கு வெளியே பல விண்கல் சுற்றி வருகின்றது. பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து செல்லும். அதில் ஒரு சிலது மட்டுமே பூமியை தாக்கும்.
இந்நிலையில் வருகின்ற 2046 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி “2023 DW”என்ற விண்கல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாசா கணித்துள்ளது. இது பூமியிலிருந்து ஜீரோ புள்ளி 12 வானியல் அலகுகள் தொலைவில் உள்ளது. அந்த சிறுகோளின் திசையில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் 2046 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி பூமி மீது மோதும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் நாசா தெரிவித்துள்ளது.