கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி( வயது 31 )வீட்டு வேலை செய்து வந்தார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் .இவர்களுக்கு ஹரிஷ் (வயது 10) ஹர்சன் (வயது 7) ஆகிய 2 மகன்கள்உள்ளனர். நேற்று முன்தினம் வேணுகோபால் வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது மனைவியையும் 2 மகன்களையும் காணவில்லை . செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேணுகோபால் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரி அவரது 2 மகன்களை தேடி வருகிறார்.
கோவையில் 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்..!
