2 வயது குழந்தையுடன் தாய் தீடீர் மாயம்..!

கோவை செல்வபுரம் ,செட்டி வீதி ,சாவித்திரி நகரை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி ஜோதி ( வயது 26 ) இவர் கடந்த 5 – ந் தேதி தனது 2 வயது மகளுடன் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து விஷ்ணு செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அழகுராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..