சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மத்திய மாநில அரசுகளில் வேலை வாங்கித் தருவதாக பிராடு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தனி போலீஸ் படை அமைத்துள்ளார். ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் சிவகுமார் வயது 33. தகப்பனார் பெயர் கிருஷ்ணன். விநாயகர் கோவில் தெரு வெள்ளானூர்.
ஆவடி புகார் மனுவில் 2021 ஆம் ஆண்டு நான் சென்னை ஐசிஎப் தீயணைப்பு நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தேன். ஐயப்பன் தாங்கலைச் சேர்ந்த அருள் ஸ்டீபன் என்பவன் எனக்கு அறிமுகமானான். நெருக்கமான நண்பராக பழகி ஒரே தட்டில் சாப்பிட்டு உயிருக்கு உயிராக பழகினோம். அருள் ஸ்டீபன் என்னிடம் மத்திய மாநில அரசுகளில் வேலைக்கு நிறைய பேர் சேர்த்து விட்டு உள்ளேன். சேலத்தைச் சேர்ந்த நண்பர் விஸ்வநாதன் என்பவன் ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளான். இதை உண்மை என்று நம்பிய சிவக்குமார் அப்பாவி தனமாக ஐடிஐ படித்துள்ளதாகவும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டத் தெரியும். அதற்கான வேலையை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். 17.5.2021ல் அஞ்சல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட கார் ஓட்டுநர் வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கான அரசின்அறிவிப்பினை சிவகுமாரிடம் கொடுத்துள்ளான். சிவகுமாரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார். நான்கு மாதங்கள் கழித்து கேடி அருள் ஸ்டீபன் சிவக்குமாரிடம் மேற்படி வேலைக்கு ரூ 5 லட்சம் செலவாகும்.உடனடியாக தயார் செய்யுமாறுகூறியுள்ளான். மேலும் 25.11.2021க்குள் மேற்படி பணியில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற பணி நியமன ஆணையை சிவகுமாரிடம் காண்பித்து நம்ப வைத்துள்ளான். சிவக்குமார் 1.10.2021ல் அருள் ஸ்டீபனியிடம் ரூ1 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.தனது அம்மா கலாவதி மற்றும் தந்தை கிருஷ்ணன் ஆகியோரின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரத்தை அருள் ஸ்டீபன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். 22.11.2021 தேதி ஒரு பணி நியமன ஆணையை போலியாக தயார் செய்து சிவக்குமாருக்கு அனுப்பி உள்ளான்.அதில் கோயம்புத்தூர் போஸ்டர் சர்கிள் அலுவலகத்தில் 5.01.2022 ஆம் தேதி அனைத்து ஆவணங்களுடன் பணியில் சேருமாறு குறிப்பிட்டு இருந்தது. சிவக்குமாரும் அருள் ஸ்டீபனின் காலில் சூடம் ஏற்றி மூன்று முறை விழுந்து விழுந்து வணங்கினான். சிவகுமாரும் தாயார் கலாவதியை அழைத்துக் கொண்டு கோயம்புத்தூர் சர்க்கிள் ஆபீசை காண்பித்து அம்மா நன்றாக பார்த்துக் கொள். நான் வேலை செய்ற ஆபீஸ்.உள்ளே போய் உரிய அதிகாரிகளிடம் பணி நியமன ஆணையை காண்பித்து கேட்டதற்கு இது போலியான ஆணை என கூறிவிட்டாராம். இது பற்றி அருள் ஸ்டீபனிடம் கேட்டதற்கு கவலைப்படாதே வேறு அரசாங்க வேலை வாங்கித் தருகிறேன் என்று ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காண காசோலையை கொடுத்து ஆனால் வங்கியில் அருள் ஸ்டீபன் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது. ஐயப்பன் நாங்கள் உள்ள வீட்டையும் காலி செய்து விட்டு சேலம் சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸ் கமிஷனர் கே. சங்கர் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பி பிரிஜூட் மேரி அதிரடி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் தலைமறைவாக இருந்த அருள் ஸ்டீபன் வயது 34. தகப்பனார் பெயர் அந்தோணிசாமி. சாய் கார்டன் வானகரம் போரூர். சென்னை என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..