கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே சி.எம்.சி.காலனியில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை ஆய்வு செய்வதற்காக கோவை மத்திய மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் கனகராஜ் குழுவுடன் நேற்று சென்றார் அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் முன் ரவி என்பவர் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார் .இதை அகற்றும் போது ரவி உதவி கமிஷனர் கனகராஜிடம் தகராறு செய்து தடுத்தாராம் .இது குறித்து கனகராஜ் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரவியை கைது செய்தனர். இவர்மீது அரசு ஊழியரை பணிசெய்ய விடாrது தடுத்தல் என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
ஆக்கிரமிப்பை அகற்றும் போது மாநகராட்சி அதிகாரியுடன் தகராறு செய்த நபர் கைது..!
