கோவை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53) இவர் கோவை நஞ்சுண்டாபுரத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து ஆபாசமாகவும் ,அவதூறு பரப்பும் வகையிலும், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் கே வசந்தராஜன் ஆகியோர் போலீசில் புகார் செய்தனர் . போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை நேற்று கைது செய்தனர் .இவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.