கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இருகூர் பக்கம் உள்ள ஏ .ஜி .புதூர் செலம்பான் காட்டு தோட்டத்தில் நேற்று மாலை திடீர சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குதடை செய்யப்பட்ட ” கள் ” விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருகூர், ஏ.ஜி .புதூர் ,ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்த நடராஜன் ( வயது 57) கைது செய்யப்பட்டார். 6 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சோதனை நடந்து வருகிறது.
இருகூர் ஏ.ஜி.புதூர் தோட்டத்தில் கள் விற்பனை செய்தவர் கைது..!
